காணிகளை மீட்டுத்தாருங்கள் – ரொட்டவெவ மக்கள் சுசந்த புஞ்சி நிலமேவிடம் கோரிக்கை

190 0

திருகோணமலை மாவட்டத்தில் மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சின்ன புளியங்குளம், பெரிய புளியங்குளம் பகுதிகளில் உள்ள தமது காணிகளை மீட்டுத்தாருங்கள் என ரொட்டவெவ மக்கள் சிறு, மத்தியதர வர்த்தக வாணிப இராஜாங்க அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமேவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரொட்டவெவ மஸ்ஜிதுல் ஹுதா ஜும்மா பள்ளிவாசலுக்கு அவரது நிதியிலிருந்து கட்டிடப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று (12) வழங்கிவைக்கப்பட்ட போதே இக் கோரிக்கையை முன்வைத்தனர்.

கடந்த மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் கமநெகும, மக நெகும திட்டத்தின் ஊடாக புளியங்குளம் புனரமைக்கப்பட்டதுடன், வீதியும் புனரமைக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது புளியங்குளம் பகுதிக்கு விவசாயத்தை மேற்கொள்வதற்கு சென்றால் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் அவர்களை அச்சுறுத்தி வருவதாகவும் வழக்குகள் தொடரப்பட்டு வருவதாகவும் மக்கள் முறையிட்டனர்.

;இதேவேளை இராஜாங்க அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே நீங்கள் அனைவரும் எனக்கு நம்பிக்கையாக இருக்க வேண்டும்.

தற்பொழுது பள்ளிவாசலுக்குள் இருந்து கொண்டிருக்கின்றீர்கள்  நீங்கள் என்னை ஏமாற்றி விட வேண்டாம் நான் உங்களை நம்புகின்றேன்.

தற்போதைய ஆட்சியில் அதாவது ; ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ எமக்கு வழங்கிய அறிவுறுத்தலின் அடிப்படையில் அனைத்து இன மக்களுக்கும் சமமாக செயற்படுமாறும் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேபோல் நான் திருகோணமலை மாவட்டத்தில் அனைத்து இன மக்களுக்கும் பாகுபாடின்றி ஒரே விதமாக சேவையாற்றி வருகின்றேன். நான் எனது சேவையை தொடர்ச்சியாக செய்து வருவேன் எனவும் நீங்கள் நான் செய்யும் சேவைக்கு எனக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் நம்பிக்கையாளராக இருக்க வேண்டும் எனவும் மக்கள் மத்தியில் கோரிக்கை விடுத்தார்.

அத்துடன் இனிவரும் காலங்களில் நீங்கள் எனக்கு வாக்களித்து இன்னும் பல சேவைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் புஞ்சி நிலமே மக்களிடம் கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை ரொட்டவெவ கிராமத்தில் மையவாடி புனரமைப்பு பணிகளுக்காக பத்து இலட்சம் ரூபாயை வழங்கி உள்ளேன். அத்துடன் பள்ளிவாசலை புனரமைப்பதற்கு இன்னும் பல நீதிகளையும் வழங்குவேன் எனவும் அவர் மக்கள் மத்தியில் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மஸ்ஜிதுல் ஹுதா ஜூம்மா பள்ளிவாசல் தலைவர் என். எம். அமான், மௌலவி எம். நஸார்தீன், மொரவெவ பிரதேச சபை உறுப்பினர் ஏ. எஸ். எம்.பைசர் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்