தொடர் விடுமுறையால் சிவனடிபாதமலைக்கு படையெடுக்கும் யாத்திரிகர்கள்!

197 0

10ஆம்,11ஆம் மற்றும் 12ஆம் திகதிகள் விடுமுறை தினமாக இருப்பதால் 9ஆம் திகதியன்றிலிருந்து சிவனடிபாதமலைக்கு சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட யாத்திரிகர்கள் வருகை தந்திருந்ததாகவும் அவர்கள் தனியார் பஸ்களிலும்,வேன்களிலும் வருகை தந்தாக நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

அது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இவ்வாரு வருகை தரும் யாத்திரிகர்களை கினிகத்தேனை தியகல சோதனை சாவடியில் சோதனை மேற்கொள்வதுடன் மஸ்கெலியா பொலிஸாரினால் மவுசாக்கலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடியிலும் சோதனை செய்து வருவதாகவும்,இவ்வாறு சோதனை மேற்கொள்வதன் நோக்கம் இப்பகுதியை புனித பிரதேசமாக பிரகடனம் செய்துள்ளமையால் போதை பொருட்களை இப்பகுதியில் தடுப்பதற்காக என குறிப்பிட்டார்.

அத்துடன் வருகை தரும் யாத்திரிகர்களின் பாதுகாப்பு கருதி பாதுகாப்பு நடவடிக்கையை மேலும் அதிகரித்துள்ளதுடன் சிவில் பாதுகாப்பு நடவடிக்கையில் அதிகளவான பொலிஸார் பணியாற்றி வருவதுடன் மலைக்கு செல்லும் யாத்திரிகளை பிளாஸ்டிக் மற்றும் பொலுத்தீன் பொருட்களை உரிய தொட்டிகளில் போடுமாறு அறிவுறுத்தல் வழங்கி வருவதாகவும் மவுசாக்கலை நீர்தேக்கத்தில் நீராடுவதை யாத்திரிகர்கள் தவிர்த்து கொள்ளுமாறு ஒலி பெருக்கி மூலம் அறித்து வருவதாகவும் தெரிவித்தார்.