தாயகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பேர்லின் தமிழாலயம் உதவிக்கரம் கொடுத்தது.

205 0

தாயகத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட உறவுகளுக்கும் குறிப்பாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கும் பேர்லின் தமிழாலய நிர்வாகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற தமிழாலய நத்தார் விழாவில் சேர்க்கப்பட்ட நிதியில் 100 நுளம்பு வலைகள் வழங்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தின் தலைவர் திரு உமாகாந்தன் அவர்களின் தலைமையில் இவ் நிகழ்வு சிறப்பாக ஒழுங்குசெய்யப்பட்டது. தாயக மக்களின் சார்பாக பேர்லின் தமிழாலயத்தின் வேண்டுகோளுக்கு பங்களித்த அனைத்து உறவுகளுக்கும் இத்தருணத்தில் நன்றியை தெரிவிக்கின்றோம்.

நிர்வாகம்
தமிழாலயம் பேர்லின்.