ஐந்து இடங்களில் டெங்கு தீவிரமடைந்துள்ளது!

289 0

டெங்கு நோய் அதிகரித்துக் காணப்படும் ஐந்து இடங்களை சுகாதார அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

அதன்படி, வத்தளை, நீர்கொழும்பு,கொதட்டுவ,கோப்பாய்,கொலன்னாவ  ஆகிய இடங்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

நகர சபை பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலும் டெங்கு ஆபத்து அதிகரித்துக் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான அனைத்துப் பகுதிகளையும் மையமாக கொண்டு டெங்கு ஒழிப்பு திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 90,000 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.