அத்தியாவசிய பொருட்களின் விலை சடுதியாக குறைவடையும் – செஹான்

296 0

உற்பத்தி துறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் மற்றும் பொது பொருளாதார காரணிகளினால் வாழ்க்கை தர செலவுகள் அதிகரித்துள்ளன. ஜனவரி மாதம்  முதல்வாரத்தில் இருந்து  அத்தியாவசிய  பொருட்களின் விலைகள் சடுதியாக குறைவடையுமென அபிவிருத்தி வங்கிகள் மற்றும் கடன்வசதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

மக்களின் வாழ்க்கை செலவுகள்  குறைக்கப்பட்டு  பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று  பொதுஜன பெரமுனவின் தேர்தல் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளமை முழுமையாக செயற்படுத்தப்படும்.

பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மக்களுக்கு நிதி வழங்கப்படும்.  வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை  மேம்படுத்துவதற்கு அனைத்து அமைச்சு மற்றும்  அரச நிறுவனங்களில் பிரத்தியேகமான  செயற்திட்டங்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய முன்னெடுக்கப்படுகின்றன.