அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்த சி.ஐ.டி.யின் முன்னாள் பணிப்பாளர்!

351 0

சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றினை தாக்கல் செய்துள்ளார்.

 

சி.ஐ.டி.யின் பணிப்பாளராக இருந்த போது, தன்னை காலி பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தனிப்பட்ட உதவியாளராக  பதவி நிலையில் கீழ் இறக்கியமை ஊடாக தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக அந்த அடிப்படை உரிமை மீறல் மனுவில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனால் அதற்கு ஒரு கோடி ரூபா நட்ட ஈட்டைப் பெற்றுத்தருமாரும் ஷானி அபேசேகர குறித்த மனுவூடாக கோரியுள்ளார்.

இதனைவிட, தன்னை பதவி கீழிறக்கல் செய்த உத்தரவை இரத்து செய்யுமாறும் மீளவும் தன்னை  சி.ஐ.டி. பணிப்பாளர் பதவியில் அமர்த்துமாறு உத்தரவிடுமாறும் அந்த மனு ஊடாக கோரப்பட்டுள்ளது.