நீதிமன்ற வளாகத்தில் பெண் கொலை : இரு பொலிஸார் பணி நீக்கம்

276 0

கேகாலை மேல் நீதிமன்ற வளாகத்தில் பெண் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில், நீதிமன்ற வளாகத்தில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 

நேற்று காலை வழக்கு நடவடிக்கைகளுக்காக கொலைசெய்யப்பட்ட பெண் சென்ற  வேளையிலேயே உயிரிழந்த பெண்ணின் கணவரால் குறித்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையிலேயே சம்பவ தினத்தன்று கடமையில் இருந்த இரு பொலிஸார் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.