சிறைச்சாலை வேன் விபத்து: ஒருவர் பலி, மூவர் காயம்

283 0

சிறைச்சாலை வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

இன்று காலை சீகிரிய திகம்பதக பிரதேசத்தில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் காயமடைந்த மூவரில் ஒருவர் கைதி என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.