ஏகா­தி­பத்­தி­ய­வா­தி­க­ளுக்கு அடி­ப­ணி­யா­ததால் தூத­ரக பணி­யாளர் கடத்தல் போன்ற போலி குற்­றச்­சாட்­டுகள் – திஸ்ஸ விதா­ரண

286 0

ஏகா­தி­பத்­தி­ய­வா­தி­க­ளுக்கு அடி­ப­ணி­யா­த­வரை எமக்கு எதி­ரான சதித்­திட்­டங்கள் தொடர்ந்து இடம்­பெற வாய்ப்பு இருக்­கின்­றது. அதற்கு முகம்­கொ­டுக்க நாங்கள் தயா­ரா­க­வேண்டும். அதன் ஓர் அங்­கமே சுவிட்சர்­லாந்து தூத­ரக பணிப்பெண் கடத்தல் குற்­றச்­சாட்டு என லங்கா சம சமாஜ கட்­சியின் தலை­வரும் வட­மத்­திய மாகாண ஆளு­ந­ரு­மான திஸ்ஸ விதா­ரண தெரி­வித்தார்.

ேசாச­லிச மக்கள் முன்­னணி நேற்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,

சுவிட்­சர்­லாந்து தூத­ர­கத்தில் பணி­யாற்­றி­வந்த பெண்ணை கடத்­திச்­சென்று துன்­பு­றுத்­தி­ய­தாக தெரி­விக்­கப்­பட்­டு­வந்த செய்தி முற்­றாக பொய்­யான சம்­பவம் என தற்­போது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. பெரும்­பான்மை சிங்­கள மக்கள் சிறு­பான்மை மக்­க­ளுக்கு எதி­ராக செயற்­ப­டு­வ­தாக சர்­வ­தே­சத்­துக்கு காட்­டு­வ­தற்­கான முயற்­சி­யா­கவே இது அமைந்­துள்­ளது. சுவிட்­ஸர்­லாந்து தூத­ர­கத்தில் பணி­யாற்­றிய பெண் சிறு­பான்மை இனத்­த­வ­ராவார்.

கடந்த காலங்­களில் நாட்டை சூறை­யா­டி­வந்த ஏகா­தி­பத்­திய நாடு­க­ளுக்கு தேவை­யான முறையில் கடந்த காலங்­களில் செயற்­பட்­டு­வந்­த­வர்கள் தொடர்ந்தும் அவர்­களின் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டு­வ­ரு­கின்­றனர். அவர்­களின் சதித்­திட்டம் இன்னும் முடி­வ­டை­ய­வில்லை. இவ்­வா­றான சம்­ப­வங்­களை உரு­வாக்கி எதிர்­வரும் மார்ச் மாதம் இடம்­பெற இருக்கும் ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை ஆணைக்­கு­ழுவில் எமக்­கெ­தி­ராக நட­வ­டிக்கை எடுக்­கவே திட்­ட­மி­டு­கின்­றனர்.

அத்­துடன் மார்ச் மாதம் இடம்­பெற இருக்கும் மனித உரிமை  பேரவை கூட்டத்  தொடரில் இலங்­கையின் அனு­ச­ர­ணை­யுடன் 2015இல் அமெ­ரிக்கா கொண்­டு­வந்த பொறுப்­புக்­கூறல் தொடர்­பான பிரே­ர­ணையை மீண்டும் கொண்­டு­வ­ரப்­போ­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அதனை எடுத்­துக்­கொள்­ளக்­கூ­டாது என அர­சாங்கம் தெரி­வித்­தி­ருக்­கின்­றது. என்­றாலும் எந்­த­ள­வுக்கு அது ஏற்­றுக்­கொள்­ளப்­படும் என தெரி­விக்க முடி­யாது.

அதனால் ஆட்­சிக்கு வந்­தி­ருக்கும் அர­சாங்கம் ஏகா­தி­பத்­திய வாதி­க­ளுக்கு தேவை­யான முறையில் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளாமல், அதற்கு எதி­ராக செயற்­பட்டு வரு­கின்­றது. அதனால் எமக்­கெ­தி­ரான பொய் குற்­றச்­சாட்­டுக்­களை உரு­வாக்கி சிங்­கள பெரும்­பான்மை மக்கள் இலங்­கையில் சிறு­பான்மை மக்களுக்கு எதிராக செயற்படுவதாக சர்வதேசத்துக்கு எடுத்துக்காட்ட சதித்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எதிர்காலத்திலும் இவ்வாறான சதித்திட்டங்கள் பல்வேறு கோணத்தில் வரலாம். அதற்கு முகம்கொடுக்க நாங்கள் தயாராக வேண்டும். இதுதொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும் என்றார்.