அர்ஜூன் மகேந்திரன் பூனையின் பாதம் போல் பயன் படுத்தப்பட்டுள்ளார்- பீரிஸ்

315 0

g-l_-peiris_1பிரதமர் ரணில் விக்ரமசிங்க ராஜினாமா செய்ய இணங்கவில்லை என்றால்,பிரதமரை பணிநீக்கம் செய்வதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இருப்பதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(01) இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் பூனையின் பாதம் போல் பயன் படுத்தப்பட்டுள்ளார், இந்த மோசடியின் பின்னால் இருக்கும் அந்த நபர் யார் என்று கண்டுபிடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அர்ஜூன் மகேந்திரன் இலங்கை வந்திறங்கிய உடனேயே அவரை கைது செய்ய வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இன்று கொழும்பில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும், பிணை முறி மோசடி காரணமாக அரசாங்கத்திற்கு 1000 பில்லியன் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த விபரம் கோப் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை எனவும், பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இந்த மோசடி விவகாரம் தொடர்பில் , பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியை இராஜினாமா செய்ய வேண்டும், அர்ஜூன் மகேந்திரன் கைது செய்யப்பட வேண்டும் என்றும் பந்துல குணவர்தன கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.