தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கும், அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று மாலை விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

அதன்படி இந்த கலந்துரையாடலானது இன்று மாலை 4 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.
இக் கலந்துரையாடலில் கலந்துகொள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது தேர்தல் சட்டங்கள் மற்றும் ஒழுங்கு முறைகள் தொடர்பில் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

