ஹெரோயின் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய நேற்று செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் மருதனைப் பிரதேசத்தில் 5 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மருதானை பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய சுதர்சனி நிசங்சலா என்ற சந்தேகநபரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளைக் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர்.

