வடக்கு மாகாண பிரதி அவைத் தலைவராக கமலேஸ்வரன் தெரிவு!

398 0

download-14-1வடக்கு மாகாண சபையின் பிரதி அவைத் தலைவராக வல்லிபுரம் கமலேஸ்வரன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இதற்கான வாக்கெடுப்பு இன்று கைதடியிலுள்ள மாகாணசபை கட்டடத்தில் நடைபெற்ற 64 ஆவது அமர்வில் நடைபெற்றது. இதன்போது 18 வாக்குகளால் வல்லிபுரம் கமலேஸ்வரன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, பிரதி அவைத் தலைவராக தெரிவு செய்யப்பட்ட வல்லிபுரம் கமலேஸ்வரன் வட மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து தனக்கான ஆசனத்தில் அமர்ந்துள்ளார்.

பிரதி அவைத்தலைவர் தெரிவின்போது பல்வேறு கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தது. இதன்போது, வடக்கு மாகாண பிரதி அவைத் தலைவராக வல்லிபுரம் கமலேஸ்வரனை நியமிக்குமாறு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிஙகம் தெரிவித்தார். ஆனால், பிரதி அவைத் தலைவராக அனந்தி சசிதரனைத் தெரிவுசெய்யுமாறு மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்திருந்தார்.

இதன்போது சபையில் குழப்பநிலை எழுந்ததைத் தொடர்ந்து வட மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே. சிவஞானம், தேநீர் இடைவேளையின் பின்னர் பிரதி அவைத் தலைவரைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இடம்பெறும் என தெரிவித்துள்ளார்.

இதன்பின்னர் இடம்பெற்ற வாக்கெடுப்பில் வடமாகாண சபை உறுப்பினரான வல்லிபுரம் கமலேஸ்வரன் 18 வாக்குகளையும் அனந்தி சசிதரன் 13 வாக்குகளையும் நடுநிலையாக 1 வாக்குகள் பதிவாகியதை அடுத்து வல்லிபுரம் கமலேஸ்வரன் வடமாகாண பிரதி அவைத் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.