இம்முறை ‘மணி’ இல்லை-கே.டீ.லால் காந்த

302 0

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மற்றும் பொதுத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி மணி சின்னத்தை கைவிட்டு வேறு சின்னத்தில் போட்டியிட உள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கே.டீ.லால் காந்த தெரிவித்துள்ளார்.

கலேவெல, புவக்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

30 சுயேட்சை குழுக்கள் ஒன்றிணைந்து தமது அமைப்பு உருவாகியுள்ளமையால், மக்கள் விடுதலை முன்னணியின் தேர்தல் சின்னத்தை நீக்கி வேறு சின்னத்தில் போட்டியிட உள்ளதாக கே.டீ.லால் காந்த மேலும் தெரிவித்தார்.

அதேபோல், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யார் அதிகாரத்திற்கு வந்தாலும், பாராளுமன்றம் கலைக்கப்பட்டு எதிர்வரும் மார்ச் மாதத்தில் பொதுத் தேர்தல் கட்டாயமாக இடம்பெறும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் கே.டீ.லால் காந்த தெரிவித்தார்.