மருந்து பொருட்களின் விலையை குறைத்ததால் மக்களுக்கு 4400 மில்லியன் இலாபம்-ராஜித சேனரத்ன

78 0

சில வைத்தியர்கள் தன்னுடன் சண்டை பிடிப்பது அவர்களுக்கு மருத்துவ நிறுவனங்கள் ஊடாக கிடைக்கும் தரகுப் பணத்தை நிறுத்தியதனாலேயே என சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார்.

காலி பகுதியில் இடம்பெற்ற கநிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஒரு வருடத்திற்குள் 48 மருந்து பொருட்களின் விலையை குறைத்ததால் மக்களுக்கு 4400 மில்லியன் இலாபம் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவ நிறுவனங்கள் ஊடாக வைத்தியர்களுக்கு கிடைக்கும் தரகுப் பணத்தை நிறுத்துவதை எந்த தடை வந்தாலும் விடப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.