சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவது உறுதி-ஹரீன்

38 0

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் உறுதியாக களமிறக்க உள்ளதாக அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நாளைய தினம் இது தொடர்பான இறுதிக் கலந்துரையாடல் ஒன்று சஜித் பிரேமதாசவுடன் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் தெரிவத்திருந்தார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தௌிவாக கூறியுள்ளதாகவும், அதற்கு ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சியின் கீழ் மட்ட தொண்டர்களின் ஆதரவு தற்போது பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு கிடைத்துள்ளதாக அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ இதன்போது தெரிவித்தார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி தேர்தலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவாராயின், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை களமிறக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.