‘கை’ சின்னத்தில் போட்டியிடுமாறு ஶ்ரீ.சு.கட்சிக்கு வடக்கில் இருந்து கோரிக்கை-திலங்க

341 0
´கை´ சின்னத்தில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து அதிக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

எனினும், இது தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு திலங்க சுமதிபால இதனை தெரிவித்தார்.