இரட்டைக்கொலை ; ஒருவர் கைது

263 0

வென்னப்புவ, வாய்க்கால் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து, கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

8 வயது சிறுவன் மற்றும் 19 வயது யுவதி ஆகிய இருவரின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கழிவு நீர் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து, இந்த கொலைகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.