விசேட வீட்டுக்கடன் முறைக்கு அனுமதி

263 0

இராணுவத்தினருக்கான வீட்டுக்கடன் முறை தொடர்பில் அமைச்சரவையில் விசேட அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்று (27) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

என்டபிரைசஸ் ஸ்ரீ லங்கா கடன்திட்டத்தின் ஊடாக, நாட்டுக்காக தியாகம் செய்த இராணுவத்தினருக்கு விசேட கடன் திட்டத்தின் கீழ் இந்த வீட்டுக்கடன் வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத்தினரின் வீட்டுப் பிரச்சினைக்கு இந்த திட்டத்தின் ஊடாக நிரந்தர தீர்வொன்றை பெற்றுக்கொள்ள முடியும் என, எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.