’தேர்தலுக்கு முன்னர் அனைவரும் வாக்குறுதியளிப்பர்’

277 0

தேர்தலுக்கு முன்னதாக பல்வேறு தரப்பினர் வழங்கும் வாக்குறுதிகளில் மாத்திரம் நம்பிக்கை வைத்திருக்க முடியாது என, பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆணடகை தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க தாம் ஆட்சிக்கு வந்ததுடன், சுயாதீன ஆணைக்குழுவை நியமிப்பதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், “இவ்வாறான வாக்குறுதிகளில் மாத்திரம் நம்பிக்கை வைத்து ஒரு தரப்பினருக்கு நாம் ஆதரவு அளிக்க முடியாது. யார் என்ன கூறினாலும், மக்கள் நடுநிலையாக தீரப்பு வழங்க வேண்டும். தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் அதிகார்தை பெற்றுக்கொள்ளவே பலரும் முயற்சிக்கினறனர்.

எமது கோரிக்கைக்கு எதிரணியினர் இவ்வாறான கருத்தொன்றை வழங்கியுள்ள நிலையில், அதனைவிட சிறந்த ஒரு நிலைப்பாட்டை ஆட்சியில் உள்ளவர்கள் வெளிப்படுத்த வேண்டும்.

இந்த விடயம் தொடர்பில் நாம் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்துக்கு அவ்வளவு சிறந்த பதில் எதுவும் கிடைக்கவில்லை.” என்றார்.