ஐ.தே.க. வேட்­பாளர் தொடர்பில் அக்­கறை காட்டும் மைத்­தி­ரி!

254 0

ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் தொடர்பில் ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அக்­க­றை­யுடன் வின­விய சம்­பவம் ஒன்று நேற்று இடம்­பெற்­றுள்­ளது.

ஐக்­கிய தேசிய முன்­ன­ணியில் அங்கம் வகிக்கும் சிறு­பான்­மை­யினக் கட்சித் தலைவர் ஒரு­வ­ருடன் நேற்றுத் தொடர்­பு­கொண்ட ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, ஐக்­கிய தேசியக் கட்­சியின் வேட்­பாளர் விவகாரம் தொடர்பில் கேட்­ட­றிந்­துள்ளார்.

ஐக்­கிய தேசியக் கட்சி வேட்­பாளர் தெரிவு விட­யத்தில் என்ன நடக்கின்றது என கேள்வி எழுப்­பிய ஜனா­தி­பதி தற்­போ­தைய நிலைவரம் தொடர்பில் கேட்­ட­றிந்­துள்ளார்.

பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பா­ள­ரான கோத்­த­பாய ராஜ­பக்­ச­வுக்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆத­ரவு வழங்க இணக்கம் தெரி­வித்­தி­ருப்­ப­தாக செய்­திகள் வெளி­யா­கி­யி­ருந்­தன. எதிர்க்­கட்சித் தலைவர் மகிந்த ராஜ­பக்­ச­வு­ட­னான சந்­திப்பின் போது இந்த இணக்கம் ஏற்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

ஆனால் கடந்த அமைச்­ச­ரவைக் கூட்­டத்தின் பின்னர் சிறு­பான்­மை­யின அமைச்சர் ஒரு­வ­ருடன் கருத்துத் தெரி­வித்த ஜனா­தி­பதி, அவ்­வா­றான இணக்­கப்­பாடு எவையும் ஏற்­ப­ட­வில்லை என்றும் அவ்­வாறு வெளியான செய்தி தவ­றா­னது என்றும் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

இந்த நிலையிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி அக்கறை காட்டி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.