சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது

295 0
ஹம்பாந்தோட்டை, சிரிபோபுர பகுதியில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட 500 சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடற்படையினருடன் விசேட அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த சட்டவிரோத சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சிகரெட்டுகள் விற்பனை செய்வதற்காக 25 பைக்கற்றுகளில் அடைத்து வைக்கபப்பட்டிருந்தாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிப்பிக்குளம் பகுதியை சேர்ந்த 20 வயதுடைய ஒருவரே குறித்த சம்பவத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரையும், கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளையும் மேலதிக விசாரணைகளுக்காக ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.