ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு கொடுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியவில்லையென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனைச் சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
2009 ஆம் ஆண்டு போர் நிறைவுக்கு வந்த பின்னர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் சுமார் 12 ஆயிரம் பேரை விடுவித்தது என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.
ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தும் எந்தவொரு அரசியல் கைதியையும் விடுவிக்க முடியவில்லை என கோட்டபாய ராஜபக்ஷ சித்தார்த்தனிடம் கூறியுள்ளார்.

