களனிவெளி ரயில்வே சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று இரவு பெய்த மழை மற்றும் கடும் காற்றின் காரணமாக ரயில்வே பாதையில் மரம் முறிந்து விழுந்ததால் அப்பகுதிக்கான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அத்தோடு குறித்த பகுதியில் ஏற்பட்ட பாதிப்பினை சீர் செய்யும் நடவடிக்கையில் பணியாளர்கள் ஈடுப்பட்டுள்ளதோடு , வெகு விரைவில் அப்பகுதிக்கான ரயில்வே சேவைகள் வழமைக்கு திரும்புமென அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

