சபாநாயருக்கு பவ்ரல் அமைப்பு கடிதம்

278 0

நாடாளுமன்றத்துக்குள் ஒழுக்கத்தை மீறி செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பு (பவ்ரல்) கோரிக்கை விடுத்துள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனை, அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியராச்சி கூறியுள்ளார.