அல்லாஹ்வின் சிந்தனை மது போதையை விட பயங்கரமானது – அத்துரலிய தேரர்

249 0

அல்லாஹ்வின் பெயரால் ஊட்டப்படும் இந்த சிந்தனை உணர்வு போதையை விடவும் பயங்கரமானது என தேசியப் பட்டியல் உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்தார்.

போதையை ஏற்றிக் கொண்டவருக்கு தனது தாய் தந்தையை வித்தியாசப்படுத்திப் பார்க்க முடியாது. நல்லது கெட்டது விளங்க மாட்டாது. நன்மை தீமை தெரியாது. ஒரு கோடிப் பேரை கொலை செய்தாலும் அதனை ஒரு புனிதமான செயலாகவே கருதுவார். இவ்வாறு கொலை செய்ததற்காக தான் சுவர்க்கத்துக்கு செல்வதாக கருதிக் கொள்கின்றார்.

இதுபோன்ற பயங்கரவாத சிந்தனையை இல்லாதொழிக்காது இந்த நாட்டில் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாது எனவும் தேரர் குறிப்பிட்டார்.

ராஜகிரியவில் உள்ள “சந்தகம் செவன” பௌத்த மத்திய நிலையத்தில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறியுள்ளார்.

மத நிந்தனைக்கு எதிரான சட்டம் அமுலில் உள்ள ஒரு நாட்டில் இவ்வாறான கருத்துக்கள் தெரிவிக்கப்படுவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.