நாட்டிலுள்ள தற்போதைய சூழலில் தேர்தல் பற்றிக் கூற முடியாதுள்ளது – மஹிந்த

325 0

நாட்டில் தற்பொழுதுள்ள அரசியல் சூழலில் நடைபெறவுள்ள தேர்தல் குறித்து எந்தத் தகவலையும் உறுதியாகக் கூற முடியாதுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் தொடர்பில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமான தகவல்கள் கிடைத்தாலும், குறித்த தினத்தில் குறிப்பிட்ட தேர்தல்தான் நடைபெறும் எனக் கூற முடியாதுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தேர்தல் ஒன்று குறித்து உத்தியோகபுர்வ அறிவித்தல் வரும் வரையில் பொறுத்திருந்து எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எது எப்படிப் போனாலும், அடுத்து வரும் ஓரிரு நாட்களில் தேர்தல் தொடர்பில் புதிய தகவலொன்று தெரியவரும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உலகம் அழிந்து போனால் மட்டுமே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் உரிய தினத்திற்குள் நடைபெறாது போகும் என ஏற்கனவே தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஊடகங்களிடம் பகிரங்கமாக அறிவித்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.