குருநாகல் பிரதிப் பொலிஸ் மாஅதிபரின் இடமாற்றம் இரத்து!

295 0

குருநாகல் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் கித்சிறி ஜயலத்துக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் நேற்று முந்தினம் நடைபெற்ற விசேட ஒன்றுகூடலின் போது, பிரதிப் பொலிஸ் மாஅதிபருக்கு திருகோணமலை பிரதேசத்திற்கு இடமாற்றம் செய்வதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.

எனினும் நேற்று(வெள்ளிக்கிழமை) மீண்டும் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டதன் பின்னர், இடமாற்றத்தை இரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு செயலாளர் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அவரின் திருகோணமலைக்கான இடமாற்றம் இரத்து செய்யப்பட்டமைக்கான காரணங்கள் எவையும் வெளியிடப்படவில்லை.