ஐரோப்பிய சங்கத்தினை திருப்திப்படுத்தும் நோக்கத்திலே மரண தண்டனையை நீக்கும் தனிநபர் பிரேணை கொண்டு வரப்பட்டுள்ளது. எமது நாட்டில் எந்த சட்டம் நடைமுறையில் காணப்பட வேண்டும் என்பதை சர்வதேச அமைப்புக்கள் தீர்மானிக்க முடியாது. மரண தண்டணையினை அமுல்படுத்துவதற்கு எழுந்துள்ள எதிர்ப்புக்களுக்கு மாத்திரமே எதிர் அணி ஆதரவு வழங்கியுள்ளது. ஒரு தரப்பினரின் சுய தேவைகளுக்காக மரணதண்டனையை நீக்கும் சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் சானக வகும்பர தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு இவ்வாறு தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் ஒழிப்பிற்கு மரண தண்டனையினை அமுல்படுத்துவதன் மூலமே தீர்வை பெற்றுக் கொடுக்க முடியும் என்பது ஜனாதிபதியின் வாதம் மரணதண்டனை என்பது ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைகளுக்கு முரணானது என்பது பிரதமரின் வாதம் இரு அரசியல் தலைவர்களின் கருத்தொற்றுமையின்மைக்கு இதுவொன்றும் புதிய தர்க்கம் அல்ல இணக்கமாக செயற்பட வேண்டிய ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் தொடர்ந்து முரண்பட்டுக் கொண்டுள்ளமையினாலே தொடர்ந்து அரசியல் ரீதியில் பிரச்சினைகள் ஏற்பட்டன.
மரண தண்டனையை நீக்கும் தனிநபர் பிரேரணையை கடந்த வாரம் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற பின்வரிசை உறுப்பினர் பாராளுமன்றத்திற்கு கொண்டு வந்தார். மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று குறிப்பிட்ட வேளையிலிருந்து சர்வதேச அமைப்புக்கள் குறிப்பாக ஐரோப்பிய சங்கம் தொடர்ந்து அதிருப்தியை வெளிப்படுத்தியது. மரண தண்டனை நிறைவேற்றுவது மனித உரிமை மீறள் என்று தமது தரப்பு நியாயத்தை சுட்டிக்காட்டியது. ஆனால் ஜனநாயகத்தையும், மனித உரிமையினையும் அடையாளப்படுத்தும் அமைப்புக்கள் ஏதும் இதுவரையில் நாட்டு மக்களின் தேர்தல் உரிமை அரசியல் தேவைகளுக்காக மீறப்பட்டுள்ளது என்பது தொடர்பில் கருத்துரைக்கவில்லை.
ஐரோப்பிய சங்கத்தினை திருப்திப்படுத்தும் நோக்கத்திலே மரண தண்டனையை நீக்கும் தனிநபர் பிரேணை கொண்டு வரப்பட்டுள்ளது. எமது நாட்டில் எந்த சட்டம் நடைமுறையில் காணப்பட வேண்டும் என்பதை சர்வதேச அமைப்புக்கள் தீர்மானிக்க முடியாது. மரண தண்டணையினை அமுல்படுத்துவதற்கு எழுந்துள்ள எதிர்ப்புக்களுக்கு மாத்திரமே எதிர் அணி ஆதரவு வழங்கியுள்ளது. ஒரு தரப்பினரின் சுய தேவைகளுக்காக மரணதண்டனையை நீக்கும் சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்க முடியாது.

