பிரமுகர் பாதுகாப்பு உத்தியோகத்தர் குழுவினரால் வேன் ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவுத்தலை கொழும்பு குற்றப் பிரிவுக்கு பதில் பொலிஸ் மா அதிபர் வழங்கியுள்ளார்.
கொழும்பு – கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் வேன் ஒன்று தாக்கப்பட்டதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
முக்கிய பிரமுகர் ஒருவர் பயணித்த கெப் வண்டி மற்றும் அதனுடன் பயணித்த டிபெண்டர் வண்டியில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் குறித்த வேன் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமது வாகனங்களுக்கு முந்திச் செல்வதற்கு இடமளிக்காததன் காரணமாகவே தான் தாக்கப்பட்டதாக அந்த வேனின் சாரதி, முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

