யாழ்ப்பாணத்தில் 5G அலைவரிசைக் கோபுரம் அமைக்கும் முயற்சியை கைவிட்டு யாழ் மாநகரத்தின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்துமாறு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிறேமச்சந்திரன் கோரியுள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :
யாழ் மாநகர முதல்வர் மாநகர பிரதேசத்தில் ஐந்தாம் தலைமுறை ஒலிக்கற்றைக் கம்பங்களை நாட்டுவதற்குத் தீர்மானித்து மக்களின் எதிர்ப்புக்களைக் கணக்கிலெடுக்காமல் நடைமுறைப்படுத்த முனைகின்றார். இத்தகைய மக்கள் விரோத நடவடிக்கையை அவர் கைவிட வேண்டும்.
யாழ்ப்பாணத்தில் 5G அலைவரிசைக் கோபுரம் அமைக்கும் முயற்சியின் அடிப்படையில் ஸ்மார்ட்போல் என்று சொல்லப்படும் கம்பங்கள் பன்னிரண்டை அமைப்பதற்கு யாழ் மாநகர முதல்வர் முடிவு செய்து அந்த வேலைகள் யாழ் மாநகரத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

