ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கருத்துக்களை வெளியிட வேண்டாம்!

350 0

அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்க வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

நேற்று மாலை அலரி மாளிகையில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கலந்துரையாடல் முடிவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க பிரதமர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்ததாக தெரிவித்துள்ளார்.