ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் ஹட்டன் நகரில் பார ஊர்த்தி ஒன்றில் சிக்குண்டு வயோதிப பெண் ஒருவர் தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று (24) மதியம் 12.15 மணி அளவில் இடம்பெற்றதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் பார ஊர்த்தியின் சாரதி ஹட்டன் பொலிஸாரினால் கைது செய்யபட்டுள்ளார்.
வீதியை கடக்க முயற்சித்த குறித்த வயோதிப பெண், பொகவந்தலாவ பகுதியில் இருந்து ஹட்டன், குடாகம பகுதிக்கு சென்ற பார ஊர்த்தியிலே சிக்குண்டத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
இதேவேளை, இந்த விபத்திற்கான காரணம் பார ஊர்த்தி சாரதியின் கவனயீனமே எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செலல்லபட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், கைது செய்யபட்ட சாரதியை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

