கடவத்தை, இகலபியன்வில பிரதேசத்தில் விகாணை ஒன்றிற்கு முன்னால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று மாலை இந்தக் கொலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மது போதையில் இருந்த இரண்டு பேருக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு மோதலாக மாறியதையடுத்து இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக அரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளதுடன், சடலம் றாகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

