அந்த மே 18 ன் இரவை நினைத்து.

182 0


இந்தபடம் …..
அன்று நடந்த கொடூரத்தை விவரித்து எழுத வார்த்தை இல்லை. வட்டுவாகல் தொடுவாய் வழியாக மக்களை சிங்கள ராணுவம் எடுக்கும் போது சந்தேகம் வரும் நபர்களை அதாவது எங்கள் கூட வந்தவர்களை சுட்டு சுட்டு எடுத்தான். சுடுபட்டு விழுந்தவர்களை தூக்க முயன்றோரையும் சுட்டான். ஐயோ அம்மா என கத்தியவர்களையும் சுட்டான். அவன் கொடுத்த அறிவிப்பு அன்று கைகளை உயர்த்தியபடி எங்கும் திரும்பாமல் நேராக வரவேண்டும் என்றான். வேறு வழியே இல்லாமல் அவன் சுட சுட நாம் கைகளை உயர்த்தி சுடுபட்டு விழுந்து குற்றுயிராக கிடந்தவர்களை மிதித்து அவர்கள் மீது ஏறி நடந்தபடி பயணித்தோம் அம்மணமாக. ஐயோ அந்த கணத்தை இன்று நினைத்தாலும் மனம் வலி தாங்க முடியாமல் குமுறுகின்றது.

பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலிவாங்கிய இறுதி நாளை வரலாறாக வைத்துக்கொண்டது வட்டுவாகல் தொடுவாய். இதை எழுதும் போதே கைகள் நடுங்குகின்றன அந்த மே 18 ன் இரவை நினைத்து.