மகனின் பாதுகாப்பை நீக்குமாறு மைத்திரி அதிரடி உத்தரவு!

283 0

daham-sirisena-pic-from-his-facebookஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்பட்டுள்ள மகனினது பாதுகாப்பை நீக்குமாறு சிறீலங்காவின் ஆட்சியாளராக இருக்கும் மைத்திரிபால சிறிசேன அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கமைய இதனை உடனடியாக அமுலுக்குக் கொண்டுவரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை இரவு விடுதியொன்றுக்குச் சென்ற தஹம் சிறிசேன, அங்குள்ள சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்துள்ளதோடு, காவலாளியையும் தாக்கியதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், இச்சம்பவத்துடன் மைத்திரிபால சிறிசேனவின் மகன் சம்பந்தப்பட்டுள்ளாரா என்பது தொடர்பாக விசாரணை நடாத்தப்படவேண்டுமெனவும் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். இதனை மைத்திரிபால சிறிசேன நேரடியாக உத்தரவிட்டுள்ளதாக பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரியப்படுத்தியிருந்தார்.