தலவாக்கலை வாலமுனையில் விபத்து-72 பேர் காயம்(படங்கள்)

296 0

talawagala-accident-2நுவரெலியா தலவாக்கலை வாலமுனை பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 72 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

தலவாக்கலையில் இருந்து டயகம நோக்கி பயணித்த தனியார் பேருந்து இன்று காலை வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது 72 மாணவர்கள் சிறு காயங்களுக்குள்ளான நிலையில் அக்கரப்பத்தனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஓல்புறுக் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

குறித்த பேருந்து வேகக் கட்டுப்பாட்டை மீறி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படும் அதேவேளை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

talawagala-accident-5 talawagala-accident-4 talawagala-accident-3