கிழக்கு மாகாண முதலமைச்சர் மத்திய அமைச்சு மீது குற்றச்சாட்டு

406 0

ac444கிழக்கு மாகாணத்தின் கல்வி துறையை வீணடிக்கும் செயற்பாடை கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை ஒன்றில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மாகாணத்தில் 5 ஆயிரத்து 21 ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

இதுதொடர்பாக விடுக்கப்பட்ட சகல கோரிக்கைகளுக்கும் கல்வி அமைச்சின் செயலாளர் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மாகாணத்தின் சாதாரண கோரிக்கைகளை பின்தள்ளி, மாகாண ஆசிரியர்களுக்கு வெளிமாவட்;டங்களுக்கு நியமனங்கள் வழங்கப்படும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் குற்றம் சுமத்தியுள்ளார்.