பொல்கொல்ல நீர்தேக்கத்தின் சகல அவசர கதவுகளும் திறக்கப்பட்டு, நீர்தேக்கத்தை வெறுமையாக்கும் பணிகள் இன்று இடம்பெறவுள்ளன.
இதற்கமைய இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரைக்கும் இந்த பணிகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், குறித்த காலப்பகுதியில், நீர் தேக்கத்தின் தாழ் நில பகுதிகளில் உள்ள மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த காலப்பகுதியில் மகாவலி கங்கையை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என நீர்தேகத்திற்கு பொறுப்பான பொறியிலாளர் வீ.ஏ.புஸ்பகுமார கோரிக்கை விடுத்துள்ளார்.

