இலங்கை மற்றும் தாய்லாந்துக்கு இடையில் இருதரப்பு ஒத்துழைப்புக்களை புதிய தளத்திற்கு கொண்டு செல்ல தயார் என தாய்லாந்து பிரதமர் பியுத் ஷேன்ஓச்சா தெரிவித்துள்ளார்.
ஆசிய பிராந்திய ஒத்துழைப்பு மாநாட்டில் பங்குகொள்ளச் சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
இதனிடையே, இலங்கைக்கு தாய்லாந்து அரசாங்கம் வழங்கிவரும் ஒத்துழைப்புகளுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது நன்றி தெரிவித்தார்.
ஆசிய பிராந்திய ஒத்துழைப்பு உச்சி மாநாடு பெங்கொக்கில் நேற்று ஆரம்பமானது.
இந்த உச்சிமாநாடு எதிர்வரும் 10ஆம் திகதிவரை நடைபெற உள்ளது.
மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று உரை நிகழ்த்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

