ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் ரீட்டா இஷாக் நாடியா நாளை இலங்கை வருகிறார்

363 0

download-67-730x410ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மையினர் தொடர்பான சிறப்பு அறிக்கையாளர் ரீட்டா இஷாக் நாடியா இலங்கை வருவுள்ளார்.

நாளை இலங்கை வரும் அவர் 20ஆம் திகதி வரையில் தங்கியிருப்பார் என கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் காரியாலயம் அறிவித்துள்ளது.

இஷாக் நாடியா, இலங்கையில் நிலவும் சிறுபான்மையினரின் அரசியல் சமூக மொழியில் சூழ்நிலைகள் குறித்து ஆராயவுள்ளார்.

இதன்போது அவர் வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களில் உள்ள சிறுபான்மை அமைப்புக்களுடன் நேரடி கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.

அத்துடன் அவர் அரசாங்க தரப்பினர் ஏனைய பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார்.

இதன்போது சேகரிக்கப்படுகின்ற விபரங்கள் அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை மாநாட்டில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.