ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படாது – மகிந்த அமரவீர

360 0

mr04082012ny_1ரத்தினபுரியில் இடம்பெற்ற கூட்டு எதிர்கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அமைச்சர் மகிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற ஏராளமான செயலமர்வுகள், கூட்டங்கள் நடைபெறுகின்றன.

இதுபோன்ற செயற்பாடுகள் விகாரைகளில், கிராமங்களில் மேற்கொள்ளப்படுகின்றன.

எதிர் கட்சியில் அங்கம் வகிக்கும் போது அவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவது வழமையே.

இதனை பெரிதாக எடுத்து கொள்ளக்கூடாது என அமைச்சர் மகிந்த அமரவீர சுட்டிக்காட்டினார்.