யெமனில் மரண சடங்கு இடம்பெற்ற வேளையில் மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதலில் குறைந்தது 140 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் மேலும் 500 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
யெமனின் தலைநகர் சனாவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது ஒரு கொடுரமான தாக்குதல் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான இணை ஒருங்கிணைக்காளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தாக்குதலை ஹெளதி கிளர்ச்சியாளர்களே மேற்கொண்டதாக யெமன் அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

