பத்தனை ஸ்ரீபாத கல்வியற் கல்லூரி நிர்வாகத்தாருடன் இராதாகிருஷ்ணன் சந்திப்பு!

12 0

ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் எதிர்வரும் காலங்களில் பெருந்தோட்டதுறை அல்லாத இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் புதிய வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் கடந்த காலங்களில் ஏற்பட்ட முறுகல் நிலை தொடர்பான கூட்டம் ஒன்று இன்று கொழும்பு விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சில் அமைச்சர் இராதாகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் கல்வியற் கல்லூரிகளின் ஆணையாளர் கே.எம்.எச். பண்டார, ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி ரமணி அபேநாயக்க, விரிவுரையாளர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியின் அபிவிருத்தி தொடர்பாகவும், கடந்த காலங்களில் ஏற்பட்ட சுமூகமற்ற சூழ்நிலை தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.

இது தொடர்பாக தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் இராதாகிருஷ்ணன்,

ஸ்ரீபாத கல்வியற் கல்லூரி தொடர்பாக கடந்த காலங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பாக ஆராய்ந்த பொழுது அங்கு ஏற்பட்டுள்ள நிலைமைகளை சுமூகமான நிலைக்கு தற்பொழுது கொண்டு வரப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கான உணவு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. நிர்வாக ரீதியாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக சுமூகமான தீர்வு எட்டப்பட்டதுடன் ஒழுக்காற்று குழுவினரின் அறிக்கை கிடைக்கப்பெற்றதுடன் குறித்த விடயங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் தொடர்பாக இடமாற்றம் செய்வதா அல்லது வேறு எவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக அறிக்கை கிடைக்கப்பெற்றவுடன் தீர்மானிப்பது எனவும் அதுவரையில் அவர்கள் தற்காலிக இடமாற்றம் நடைமுறையில் இருக்கும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இதன்போது விரிவுரையாளர்களால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு ஆணையாளர் அது தொடர்பாக தான் கவனம் செலுத்துவதாகவும், அது தொடர்பாக விரிவுரையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாது வகையில் தீர்மானங்களை மேற்கொள்வதாகவும் ஆணையாளர் தெரிவித்தார்.

எதிர்வரும் காலங்களில் அங்கு ஏற்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடுவதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த குழுவில் விரிவுரையாளர்கள், உப பீடாதிபதிகள், மாணவர்கள் அணைவரும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த காலங்களில் ஸ்ரீபாத கல்வியற் கல்லூரிக்கு கடந்த காலங்களில் பெருந்தோட்டதுறையை சார்ந்த மாணவர்கள் மாத்திரமே உள்வாங்கப்பட்டனர். பெருந்தோட்டதுறையில் கணித, விஞ்ஞான பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் குறைவான எண்ணிக்கையினர் இருந்த காரணத்தினால் அந்த துறைக்கான ஆசிரியர்களை உருவாக்குவதில் பின்னடைவு ஏற்பட்டது.

எனவே எதிர்வரும் காலங்களில் இந்திய வம்சாவளி தமிழர்களை உள்வாங்குவதற்கான வர்த்தமானி அறிவித்தில் ஒன்றை வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது நான் கல்வி இராஜாங்க அமைச்சராக இருந்த காலத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்பதையும் குறிப்பிட விரும்புகின்றேன்.

அதே நேரம் ஸ்ரீபாத கல்வியற் கல்லூரிக்கு மாதம் ஒரு முறை கல்வி அமைச்சில் இருந்து பணிப்பாளர் ஒருவரை அனுப்பி நிலைமைகளை ஆராய்ந்து கல்லூரியில் சுமூகமான நிலைமையை ஏற்படுத்தி கல்லூரியை சிறப்பாக கொண்டு செல்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Post

இலங்கை குறித்த அறிக்கை மார்ச் 22ல் ஜெனிவாவில்

Posted by - December 22, 2016 0
ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34 வது கூட்டத்தொடர் எதிர்வரும் 2017ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27ம் திகதி முதல் மார்ச் மாதம்…

படகு கவிழ்ந்து விபத்து

Posted by - June 24, 2018 0
வாரியபொல, மல்லகனை குளத்தில் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த இச் சம்பவத்தில் படகில் பயணித்த ஐவருள் இரண்டு பேரை காப்பாற்றியுள்ளதாகவும் ஏனைய மூவரை தேடும் பணிகள்…

எவன்காட் வழக்கு எழுத்து மூல சமர்ப்பணத்திற்காக நவம்பர் 17 ஆம் திகதிவரை ஒத்திவைப்பு

Posted by - August 12, 2017 0
தெற்கு கடற்­பி­ர­தே­சத்தில் மிதக்கும் ஆயுத களஞ்­சி­ய­மான எவன் காட் நிறு­வ­னத்தை நடத்திச் செல்­வ­தற்கு மெரிடைம் தனியார் நிறு­வ­னத்­திற்கு அனு­ம­தியை வழங்­கிய கார­ணத்­தினால் அர­சாங்­கத்­திற்கு 11. 4 மில்­லியன்…

கட்சியை தாரைவார்க்க வேண்டாம்- டிலானுக்கு துமிந்த அறிவுறுத்தல்

Posted by - December 23, 2017 0
இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ள கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்தே அன்றி கட்சியினுடையது அல்லவெனவும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை எவரும் தாரைவார்க்க வேண்டாம் எனவும்…

அத்துரலிய ரத்தன தேரருக்கு சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட முடியாது- சம்பிக்க ரணவக்க

Posted by - February 16, 2017 0
அத்துரலிய ரத்தன தேரர் அரசியல் கட்சி ஒன்றில் அங்கம் வகிக்காது சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட முடியாது என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. ஜாதிக ஹெல…