தோட்டங்கள் தோறும் பச்சை வீடுகள் அமைப்பு!

289 0

ஆரோக்கியமான சமூகம் வளமான வாழ்க்கை எனும் தொனிப்பொருளில் மலையகத்தில் காணப்படுகின்ற தோட்டப்புற மக்களை ஆரோக்கியமான மக்களாக வாழ வைப்பதற்காக தோட்டங்கள் தோறும் பச்சை வீடுகள் அமைத்து இரசாயன கலவை அற்ற மரக்கறிகளையும் உணவுகளையும் பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம்  ஒன்றினை தோட்ட நிர்வாகம் சேவ் த சில்ரன் நிறுவனத்துடன் இணைந்து தோட்டப்பகுதியில் முன்னெடுத்து வருகிறது.

இந்த வேலைத் திட்டத்தின் மூலம் சிறுவர் நிலையங்களில் உள்ள சிறார்களுக்கு இரசாயனம் அல்லாத போசனை நிறைந்த உணவு வழங்குவதற்கான வேலை திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்காக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பல தோட்டங்களில் பச்சை வீடுகள் அமைத்து சேதனப் பசளை கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட மரக்கறிகள் சிறுவர் நிலையங்ளில் உள்ள சிறார்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றனர்.

இந்தத் திட்டத்தின் மூலம் நுவரெலியா மாவட்டத்தில் மந்த போசனையை இல்லாது செய்து சிறந்த போசனை மிக்க உணவு பழக்கங்கள் மூலம் ஆளுமைமிக்க சமூகம் ஒன்றினை கட்டியெழுப்புவதே இதன் நோக்கமாகும்.

 இதற்காக பச்சை வீடு திறப்பு நிகழ்வு  சேவ் த சில்ட்ரன் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஹெலன் ஹை என்சன் தலைமையில் களனிவெளி பெருந்தோட்ட  கம்பெனிக்கு சொந்தமான எடின்ப்ரோ தோட்டத்தில் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு முகாமையாளர் உதித்த தென்னகோன், நிறுவனத்தின் சேவை நிறுவனத்தின் திட்டமிடல் பணிப்பாளர் ரவி வர்மா உட்பட முகாமையாளர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்