அறுவாக்காட்டு பிரதேசத்தை சாக்கடையாக்கும் திட்டத்தை வாபஸ்பெற வேண்டும்- காதர் மஸ்தான்

11 0

திண்மக்கழிவுகளை கொட்டி புத்தளம் அறுவாக்காட்டு பிரதேசத்தை சாக்கடையாக்கும் அரசாங்கத்தின் திட்டத்தை வாபஸ்பெறவேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் காதர்  மஸ்தான் இன்று சபையில் தெரிவித்தார். 

அங்கு மேலும் தெரிவித்த அவர்,

வன்னி மக்கள்  யுத்தத்துக்கு முன்னர்  வாழ்ந்த சொந்த இடங்களில்  எவ்வாறு தமது விவசாயம், மந்தை மேய்ப்பு, சேனைப் பயிச்செய்கை மற்றும்  மீன்பிடித் தொழில்களைச் செய்துவந்தார்களோ அதே வகையில் எவ்வித தடைகளுமின்றி தமது வாழ்வாதார நடவடிக்கைளை முன்னெடுக்கத் தேவையான சூழல் மீண்டும் உறுதி செய்யப்பட வேண்டும் 

அத்துடன் மீள்குடியேறிய மக்களின் வீட்டுத்திட்ட பிரச்சினை தொடர் கதையாகவே இருந்து கொண்டு இருக்கின்றது. இப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும். இதற்கு விஞ்ஞான ரீதியான நீதியான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும். பிராந்திய ரீதியான மேன்முறையீட்டு குழுவோடு அமைச்சு மட்டத்திலான அல்லது தேசிய மட்டத்திலான மேன்முறையீட்டு ஆணைக்குழு ஒன்றை நிறுவி சுதந்திரமான நீதியான பக்கச்சார்பற்ற வினைத்திறன் மிக்க செயற்பாட்டுக்கு வழிவகுக்க வேண்டுமென பிரதமரிடம் பாதிக்கப்பட்ட வடக்கு மக்கள் சார்பாக விஷேடமாக வன்னி மாவட்டத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டத்தின் மக்கள் சார்பாக வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றார்.

Related Post

அரச வைத்திய அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு – நெவில் பெர்னான்டோ

Posted by - May 4, 2017 0
நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினருக்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாக சைட்டம் தனியார் வைத்தியக் கல்லூரியின் தலைவர் நெவில் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். சைட்டத்துக்கு…

பொலிஸில் சிக்கிய BMW i8 இன் உரிமையாளர்

Posted by - March 19, 2018 0
தலங்கம, தலவத்துகொட பகுதியில் 2 வாகனங்களுடன் மோதி தியவன்னா ஆற்றினுல் விழுந்து இருந்த BMW i8 ரக ஆடம்பர வாகனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர்…

சர்வதேச போதைப் பொருள் வர்த்தகரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உத்தரவு

Posted by - May 2, 2017 0
சர்வதேச போதைப் பொருள் வர்த்தகரான மொஹமட் சித்திக்கை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு, வெலிக்கடை சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவருக்கு எதிராக குற்றப் புலனாய்வுப்…

‘கோரா’ திடீர் மரணம்

Posted by - May 30, 2018 0
ஹட்டன் பொலிஸ் வலயத்தின் மோப்பநாய் பிரிவில் இருந்த கோரா என்ற மோப்பநாய் நேற்று செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். 08 வயதினை கொண்ட கோரா…

சம்பந்தன் கௌரவமாக எதிர்க்கட்சி தலைவர் பதவியை மஹிந்தவிற்கு வழங்க வேண்டும் – மஹிந்த

Posted by - December 21, 2018 0
பாராளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் பதவி வகிக்கக் கூடிய தகுதி பெரும்பாண்மை அடிப்படையில் எம்மிடமே காணப்படுகின்றது என மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அதாவது தமிழ் தேசிய கூட்டமைப்பில் 16…