கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா 15,16 ஆம் திகதி

244 0

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இம்மாதம் 15, 16 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. 

திருவிழாவிற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியிருப்பதாக யாழ் மாவட்ட ஆட்சியர் நா.வேதநாயகம் தெரிவித்துள்ளார். பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்கான பணிகளை கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, கச்சதீவு செல்ல 2,500 பேர் முன்பதிவு செய்துள்ளதாக தமிழ் நாட்டின் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார். இவர்களுள் 225 பேர் நாட்டுப்படகில் செல்லவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.