‘பொறுத்தது போதும்’ மஹிந்த தலைமையில் நாடு தழுவிய ரீதியில் போராட்டம்

422 0

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் ‘பொறுத்தது போதும்’ என்ற தொனிப்பொருளில் பொதுஜன பெரமுன முன்னணியினர் நாடு தழுவிய ரீதியில் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர். 

இதற்கமைய இந்த எதிர்ப்பு போராட்டத்தின் முதற்கட்டம் எதிர்வரும் 08 ஆம் திகதி கண்டி நகரில் இடம்பெறவுள்ளது.

இவ்வாறு ஆரம்பிக்கப்படவுள்ள போராட்டம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் வரை நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் குறைபாடுகளும், ஊழல் மோசடிகளும் மக்கள் மத்தியில் ஆதாரபூர்வமாக எடுத்துரைக்க நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.