பத்தலங்குண்டுவ – வெல்ல கடற்பகுதியில் வடமேல் கடற்படையினரால் தடை செய்யப்பட்டுள்ள சட்ட விரோதமான மீன்பிடி வலை மீட்கப்பட்டுள்ளது.
வடமேல் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கைகளின் போதே குறித்த மீன்பிடி வலை மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
20 மீற்றர் நீளம் கொண்ட மேற்படி மீன்பிடி வலை மேலதிக விசாரணைகளுக்காக கல்பிட்டி மீன்பிடி செயற்பாடு அலுவலகத்திற்கு ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


