விவசாயத்தை நவீனமயப்படுத்த 12000 மில்லியன் ரூபா!

255 0

விவசாயத்தை நவீனமயப்படுத்தும் திட்டத்துக்கு 12000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த திட்டத்தின் ஊடாக விவசாயிகளின் உற்பத்திகளை கொள்வனவு செய்யும் நிறுவனங்கள் மற்றும் விவசாயிகளுக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இது தொடர்பான நிகழ்வு விவசாய அமைச்சில் சமீபத்தில் இடம்பெற்றது. 

தேசிய உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு வர்த்தக சந்தையை அறிமுகப்படுத்துதல் தனியார் துறையினருடனான தொடர்புகளை மேம்படுத்தி விவசாயிகளுக்கிடையில் இடைதரகர்களின் தலையீட்டை கட்டுப்படுத்துவதற்கும் விவசாயிகளின் அறுவடைக்கு ஆகக்கூடிய விலையை பெற்றுக்கொடுப்பதும் இதன் நோக்கமாகும். 

இதேபோன்று விவசாயிகளுக்கு தேவையான சந்தை வசதிகளை மேம்படுத்துவதற்கும் உற்பத்தியின் போது நவீனதொழில்நுட்பத்தை பெற்றுக்கொடுப்பதுமே இந்த திட்டத்தின் மற்றுமொரு நோக்கமாகும்.